1
மத்தேயு 14:30-31
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஆனால் அவன் காற்றைக் கண்டபோது, பயமடைந்து கடலில் மூழ்கத் தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான். உடனே இயேசு தமது கையை நீட்டி, அவனைப் பிடித்து, “விசுவாசம் குறைந்தவனே! நீ ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார்.
ஒப்பீடு
மத்தேயு 14:30-31 ஆராயுங்கள்
2
மத்தேயு 14:30
ஆனால் அவன் காற்றைக் கண்டபோது, பயமடைந்து கடலில் மூழ்கத் தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான்.
மத்தேயு 14:30 ஆராயுங்கள்
3
மத்தேயு 14:27
உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார்.
மத்தேயு 14:27 ஆராயுங்கள்
4
மத்தேயு 14:28-29
அதற்கு பேதுரு, “ஆண்டவரே, உண்மையில் நீர்தான் என்றால், நானும் தண்ணீர் மேல் நடந்து உம்மிடம் வரும்படி கட்டளையிடுவீராக” என்றான். அதற்கு அவர், “வா” என்றார். அப்போது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான்.
மத்தேயு 14:28-29 ஆராயுங்கள்
5
மத்தேயு 14:33
படகில் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்” என்றார்கள்.
மத்தேயு 14:33 ஆராயுங்கள்
6
மத்தேயு 14:16-17
அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார். “இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள்.
மத்தேயு 14:16-17 ஆராயுங்கள்
7
மத்தேயு 14:18-19
அவர், “அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அதன்பின்பு அவர் மக்களை புற்தரையில் அமர்ந்திருக்கச் செய்து, அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைத் துண்டு துண்டுகளாக்கிச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள்.
மத்தேயு 14:18-19 ஆராயுங்கள்
8
மத்தேயு 14:20
அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள். அவர்கள் உண்ட பின்னர் மீதியான துண்டுகளை, சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
மத்தேயு 14:20 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்