தண்டனையின் நாட்கள் சமீபமாயிருக்கின்றன;
கணக்குக் கேட்கும் நாட்களும் நெருங்கிவிட்டன.
இதை இஸ்ரயேல் தெரிவுசெய்யட்டும்.
உனது பாவங்கள் அநேகமாயிருக்கின்றதனாலும்,
உனது பகைமையுணர்வு அதிகமாயிருக்கின்றதனாலும்
இறைவாக்கினன் மூடனாக எண்ணப்படுகிறான்.
இறைவனின் அகத்தூண்டல் பெற்றவன் புத்திபேதலித்தவனாய் எண்ணப்படுகிறான்.