பின்பு பார்வோன் யோசேப்பிடம், “இவை எல்லாவற்றையும் இறைவன் உனக்கு தெரிவித்திருப்பதால், உன்னைப் போன்ற விவேகமும் ஞானமும் உள்ளவன் வேறொருவனும் இல்லை. எனவே, நீ என் அரண்மனையின் அதிகாரியாக இருப்பாயாக! என் மக்கள் யாவரும் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். என் அரியணையில் மட்டுமே நான் உன்னிலும் பெரியவனாயிருப்பேன்” என்றான்.