ஆனால் முன்பு செய்த அதேயளவு செங்கற்களைத் தயாரிக்கும்படி சொல்லுங்கள்; ஒவ்வொருவருக்குமுரிய எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பேறிகள்; அதனால்தான் அவர்கள், ‘நாங்கள் போய் எங்கள் இறைவனுக்குப் பலி செலுத்த அனுமதியும்’ என்று கெஞ்சுகிறார்கள். பொய்களை நம்பாமல், தொடர்ந்து வேலை செய்யும்படி அவர்களுடைய வேலையை இன்னும் கடினமாக்குங்கள்” என்றான்.