வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிலிப்பியர் 4:6

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்

30 நாட்கள்

தேவன் உங்களைப் படைத்து, இந்த நேரத்தில் உங்களை உருவாக்கினார், அன்பில்லாதவர்களை நேசிக்கவும், கொந்தளிப்பில் அமைதியைப் பிரதிபலிக்கவும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதிர்மறையான மகிழ்ச்சியைக் காட்டவும். இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் இயல்பான மனித உணர்ச்சிகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்றும் வேதாகமம் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சாதாரண மற்றும் சில சமயங்களில் அசாதாரணமான சவால்களை இந்த தியானம் உள்ளடக்கியது, மேலும் உங்கள் உணர்ச்சிகளை தெய்வீக வழியில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய வேதகமாக் குறிப்புகளை வழங்குகிறது.