வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 15:5

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

3 நாட்களில்

அனுதின வாழ்க்கையில் நமது மனதின் உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் ஆன்மீகப் போர்களை சமாளிப்பது என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு தொடர்ச்சியான பயணமாகும். அது சுய விருப்பத்துடன் செயல்படும் மல்யுத்தமாக இருந்தாலும், தன்னிறைவுக்கான சோதனையாக இருந்தாலும் அல்லது பரிபூரணத்தின் சுமையாக இருந்தாலும், இந்த சவால்கள் நமது ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கலாம். தேவனுடைய வார்த்தையின் பக்கம் திரும்புவதாலும், நம் விருப்பத்தை தேவனுடைய பாதத்தில் ஒப்படைப்பதாலும், அவருடைய பலத்திற்கான நமது தேவையை அங்கீகரிப்பதன் மூலம், நமது தோல்விகளின் மீது அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்வதால், உண்மையான அமைதியையும் நோக்கத்தையும் நாம் காணலாம். விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் இந்தப் போராட்டங்களை எவ்வாறு வழிநடத்துவது என்பதை ஆராய்வோம்.

தேவனுடைய நட்பை அனுபவித்தல்

தேவனுடைய நட்பை அனுபவித்தல்

5 நாட்கள்

நீரூற்றுக்காக ஏங்கும் வனாந்திரம் போல உங்கள் ஆத்துமாவில் உணர்கிறீர்களா? இந்த வனாந்திர காலம், தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் இன்னும் நெருக்கமாகவும், அதிகாரபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பளித்து, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் காலமாகவும் இருக்கக்கூடும். இந்த வனாந்திர அனுபவத்தில், உங்கள் வாழ்க்கை எள்ளவும் நகராதது போல உங்களுக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் இந்த காலம் உங்களுடைய வாழ்வில் வீணாக்கப்பட்ட காலம் அல்ல என்பதை நீங்கள் உணரும்படி இந்த தியானம் உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் எப்படிப்பட்ட கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் தனியாக பயணிக்கவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். காரணம், உங்கள் தேவனாகிய கர்த்தர், ஜீவனளிப்பவராகவும், ஆறுதலளிப்பவராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார்.

போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்

போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்

7 நாட்கள்

இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்தானா அல்லது ஆவிக்குரிய மனிதனுக்கா? பயம், பழைய தோல்விகள் மற்றும் புரிந்துகொள்ள முடியாமை போன்றவை நம்மை தடுக்கக் கூடும். "போ செய் சொல் கொடு" என்பது ஒரு உறுதிமொழி/ ஜெபம் அது உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அடுத்து என்ன அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும். இயேசு உடனே கூடவரும் விடுதலையை உணருங்கள்