இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 15:16

தேவனே, என்னைப் பற்றி என்ன?
5 நாட்கள்
நாம் வாழ்க்கையில் பின்தங்கிவிட்டதாக உணரும்போது, நாட்கள் செல்ல செல்ல ஒப்பிடும் குரல் சத்தமாகும்போது, தேவன் நம் நடுவில் நடமாடுவதை நாம் அடிக்கடி பார்க்கத் தவறிவிடுகிறோம். இந்த தருணங்களில் தான் நமது விசுவாசம் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த பக்திப்பாடலைப் படித்து, தேவனுக்கான உங்கள் காத்திருப்பில் உற்சாகமடையுங்கள்.

தேவனுடைய நட்பை அனுபவித்தல்
5 நாட்கள்
நீரூற்றுக்காக ஏங்கும் வனாந்திரம் போல உங்கள் ஆத்துமாவில் உணர்கிறீர்களா? இந்த வனாந்திர காலம், தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் இன்னும் நெருக்கமாகவும், அதிகாரபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பளித்து, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் காலமாகவும் இருக்கக்கூடும். இந்த வனாந்திர அனுபவத்தில், உங்கள் வாழ்க்கை எள்ளவும் நகராதது போல உங்களுக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் இந்த காலம் உங்களுடைய வாழ்வில் வீணாக்கப்பட்ட காலம் அல்ல என்பதை நீங்கள் உணரும்படி இந்த தியானம் உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் எப்படிப்பட்ட கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் தனியாக பயணிக்கவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். காரணம், உங்கள் தேவனாகிய கர்த்தர், ஜீவனளிப்பவராகவும், ஆறுதலளிப்பவராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார்.

20/20: பார்த்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டது. அனுப்பப்பட்டது. கிறிஸ்டின் கெய்ன் மூலம்
7 நாட்கள்
தேவன் உங்களை காண்கிறார் என்கிற உணர்வை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? உங்கள் அன்றாட, சாதாரண வாழ்க்கை குறிப்பிடத்தக்க நித்திய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கிறிஸ்டின் கெய்னின் இந்த 7-நாள் தியானத்திட்டம், தேவன் உங்களை எப்படிப் காண்கிறார், எப்படி உங்களைத் தேர்ந்தெடுத்தார், அதுமட்டுமல்லாது மற்றவர்களை எப்படி பார்க்க அனுப்பினார், மேலும் தேவன் அவர்களைப் பார்க்கும் விதத்தை 20/20 நோக்கோடு பார்க்க உதவும்.

கீழ்ப்படிதல்
2 வாரங்கள்
என்னில் அன்பாயிருக்கிறவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான் என்று இயேசுவே கூறியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் நமக்கு என்ன ஆனாலும் சரி, நம் கீழ்ப்படிதல் கர்த்தருக்கு மிகவும் முக்கியமானது. இந்த "கீழ்ப்படிதல்" வாசிப்புத் திட்டம் வேதத்தில் கீழ்ப்படிதலைக் குறித்துச் சொல்லும் விஷயங்களை எடுத்துக் காட்டுகிறது: எவ்வாறு நேர்மையான மனப்பாங்கைப் பேணுவது, இரக்கத்தின் செயல் பங்கு, எவ்வாறு கீழ்ப்படிதல் நம்மை விடுதலையாக்கி நம் வாழ்வை ஆசீர்வதிக்கிறது, மற்றும் பல அம்சங்கள்.