சங் 76

76
சங்கீதம் 76
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.
1யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;
இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
2சாலேமில் அவருடைய கூடாரமும்,
சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
3அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,
கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,
உறங்கி அசந்தார்கள்;
வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
6யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்
இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
7நீர், நீரே, பயங்கரமானவர்;
உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
8நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,
தேவனே நீர் எழுந்தருளினபோது,
9வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;
பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
10மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்;
மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
11பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்;
அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
12பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;
பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

اکنون انتخاب شده:

சங் 76: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید