சங் 130

130
சங்கீதம் 130
ஆரோகண பாடல்.
1யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்;
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு
உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.
3யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால்,
யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
5யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது;
அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட
அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
7இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக;
கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
8அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.

اکنون انتخاب شده:

சங் 130: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید