சங் 128

128
சங்கீதம் 128
ஆரோகண பாடல்.
1யெகோவாவுக்குப் பயந்து,
அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
2உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்;
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
3உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும்
திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்;
உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
4இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன்
இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
5யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்;
நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
6நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும்,
இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

اکنون انتخاب شده:

சங் 128: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید