சங் 114

114
சங்கீதம் 114
1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
2யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,
இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
3கடல் கண்டு விலகி ஓடினது;
யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,
குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;
யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,
நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும்,
உங்களுக்கு என்ன வந்தது?
7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,
யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,
கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

اکنون انتخاب شده:

சங் 114: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید