யோபு 25

25
அத்தியாயம் 25
பில்தாதின் வார்த்தைகள்
1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
2“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது;
அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
3அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?
பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது;
நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.

اکنون انتخاب شده:

யோபு 25: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید