YouVersion Logo
Search Icon

சகரியா 13

13
பாவத்திலிருந்து சுத்திகரிப்பு
1“அந்தநாளிலே தாவீதின் வழித்தோன்றல்களுக்காகவும், எருசலேமின் குடிமக்களுக்காகவும் ஊற்றொன்று திறக்கப்படும். அது அவர்களைப் பாவத்திலிருந்தும் அசுத்தத்திலிருந்தும் சுத்திகரிக்கும்.
2“அந்தநாளில், நான் நாட்டிலிருந்து விக்கிரகங்களின் பெயரை அகற்றி விடுவேன்; அவை இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை” என சேனைகளின் கர்த்தர் கூறுகின்றார். “பொய்யான இறைவாக்கினர்களையும், அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து நீக்குவேன். 3இனி ஒருவன் பொய்யான இறைவாக்கு சொல்வானாயின், அவனைப் பெற்றெடுத்த தாயும் தந்தையும் அவனிடம், ‘நீ கர்த்தரின் பெயரில் பொய் சொன்னாய். ஆதலால் நீ மரணிக்க வேண்டும்’ என அவனுக்குச் சொல்லி, அவன் இறைவாக்கு உரைக்கும்போது, அவனுடைய பெற்றோர்கள் அவனை ஊடுருவக் குத்துவார்கள்.
4“அந்தநாளில் பொய்யான இறைவாக்கினன் ஒவ்வொருவனும், தன்னுடைய தரிசனங்களைக் குறித்து வெட்கமடைந்து, மக்களை ஏமாற்றும்படியாக இறைவாக்கினருக்குரிய உரோமத்தினாலான ஆடையை அணிய மாட்டான். 5அவனோ, ‘நான் ஒரு இறைவாக்கினன் அல்ல, நான் ஒரு விவசாயி; நான் சிறுவயதிலிருந்து நிலத்தில் வேலை செய்கின்றேன்#13:5 அல்லது சிறுவயதிலிருந்தே ஒரு விவசாயியிடம் வேலை செய்ய ஆரம்பித்தேன்.’ என்பான். 6ஒருவன் அவனிடம், ‘உன் உடலில் இந்தக் காயங்கள் எவ்வாறு உண்டாயின?’ எனக் கேட்டால், அதற்கு அவன், ‘அவை என் நண்பர்களின் வீட்டிலே நான் பட்ட காயங்கள்’ என்பான்.
மந்தை சிதறடிக்கப்படுதல்
7“வாளே, என் மேய்ப்பனுக்கு எதிராக விழித்தெழு,
எனக்கு நெருங்கிய மனிதனுக்கு எதிராய் விழித்தெழு!”
என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
“மேய்ப்பனை அடி;
அப்போது செம்மறியாடுகள் சிதறடிக்கப்படும்.
நானோ அதன் குட்டிகளுக்கு எதிராக என் கையைத் திருப்புவேன்.
8நாடு முழுவதிலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்
வெட்டுண்டு அழிந்து போவார்கள்” என்று கர்த்தர் சொல்கின்றார்.
எனினும், “அதில் மூன்றில் ஒரு பங்கு எஞ்சியிருக்கும்.
9இந்த மூன்றில் ஒரு பங்கை நான் நெருப்புக்குள் இட்டு,
வெள்ளியைப் போல் புடமிட்டு,
அவர்களைத் தங்கத்தைப் போல் சுத்திகரிப்பேன்.
அவர்கள் என் பெயரில் மன்றாடுவார்கள்.
நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்.
நான், ‘இவர்கள் என் மக்கள்’ என்பேன்.
அவர்கள், ‘கர்த்தர் எங்கள் இறைவன்’ என்பார்கள்.”

Currently Selected:

சகரியா 13: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in