ரோமர் 9
9
இஸ்ரயேலைப் பற்றிய மனவேதனை
1இப்போது நான் சொல்வது பொய்யல்ல, என் மனசாட்சியும் பரிசுத்த ஆவிக்குள்ளாக என்னோடு சேர்ந்து எனக்கு சாட்சியளிக்கின்றது. கிறிஸ்துவுக்குள் நான் சொல்லும் உண்மை என்னவெனில், 2என் இருதயத்தில் ஆழ்ந்த சோகமும் நீங்காத மனவேதனையும் உள்ளன. 3என்னுடைய சரீரத்தின்படி எனது சொந்த இனத்தவராகவும், என்னுடைய சொந்த சகோதர சகோதரிகளாகவும் இருக்கும் யூத மக்களுக்காக, நான் சபிக்கப்பட்டு கிறிஸ்துவைவிட்டு ஒதுக்கப்படுவதை நான் விரும்பக்கூடும். 4இஸ்ரயேலர்#9:4 இஸ்ரயேலர் – பழைய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்தவரான, இஸ்ரயேல் என்ற பெயர் மாற்றம் பெற்ற யாக்கோபு எனப்பட்டவரது சந்ததியினர் அவர்களே என்பது இதன் பொருள். எனப்பட்ட இவர்களே, இறைவனின் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். மகிமை இவர்களுடையது, உடன்படிக்கைகள் இவர்களுடையவை. மோசேயின் நீதிச்சட்டம் இவர்களுடையது, ஆலய வழிபாடுகள், இறைவாக்குறுதிகள் இவர்களுடையவை. 5முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, மனித இயல்பின்படி பார்த்தால் அவர்கள் மூலமாகவே கிறிஸ்து வந்தார்; அவரே அனைத்துக்கும் மேலான இறைவன், என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஆமென்.
இறைவனுடைய தெரிந்தெடுத்தல்
6இதனால் இறைவனுடைய வார்த்தை நிறைவேறவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது. காரணம், இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே உண்மையான இஸ்ரயேலர்கள் அல்ல. 7அத்துடன், ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் என்பதனால் அவர்கள் அனைவருமே பிள்ளைகளும் அல்ல. மாறாக, “ஈசாக்கின் ஊடாக வருவோரே உனது வழித்தோன்றல்கள் என்று அழைக்கப்படுவார்கள்”#9:7 ஆதி. 21:12 என்று சொல்லப்பட்டது. 8அதாவது சரீரத்தின்படி பிறக்கின்றவர்கள் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல, மாறாக வாக்குறுதியின்படியான பிள்ளைகளே வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றார்கள். 9ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் மீண்டும் வருவேன். அப்போது சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்”#9:9 ஆதி. 18:10,14 என்பதல்லவோ ஆபிரகாமுக்குக்#9:9 ஆபிரகாமுக்குக் விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் வசனம்.
10அதுமட்டுமன்றி, நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்ற ஒரே மனிதன் மூலமாக ரெபேக்காள் பிள்ளைகளைக் கர்ப்பம் தரித்தாள். 11பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, அதாவது அவர்கள் நன்மை தீமை ஒன்றும் செய்வதற்கு முன்னரே, இறைவனின் தெரிவின்படி அவரது நோக்கம் தொடர்ந்து நிறைவேறவும், அது மனிதரின் செயல்களினால் அல்லாமல், அழைக்கின்றவராலே நிறைவேறும்படியாகவும், 12“மூத்தவன் இளையவனுக்குப் பணி செய்வான்”#9:12 ஆதி. 25:23 என்று ரெபேக்காளுக்குச் சொல்லப்பட்டது. 13அதேபோல், “நான் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தேன்”#9:13 மல். 1:2,3 என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.
14ஆகவே நாம் என்ன சொல்வோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை. 15ஏனெனில் இறைவன் மோசேயிடம்,
“நான் யார்மேல் இரக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ,
அவன்மீது இரக்கமாயிருப்பேன்.
நான் யார்மேல் மன உருக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ,
அவன்மீது மன உருக்கமாயிருப்பேன்”#9:15 யாத். 33:19
என்றார்.
16ஆகவே, ஒருவர் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வது, அதை வாஞ்சிப்பவனிடத்திலோ, அதற்காக பெருமுயற்சி செய்பவனிடத்திலோ தங்கியிருப்பதில்லை, மாறாக இரங்குகின்ற இறைவனிலேயே தங்கியிருக்கிறது. 17ஏனெனில் இறைவன் பார்வோனிடம் சொன்னதை வேதவசனம் இவ்வாறு கூறுகிறது: “உன்னை நான் இதற்காகவே உயர்த்தினேன்; என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, என்னுடைய பெயர் உலகெங்கும் பறைசாற்றப்படவே உன்னை உயர்த்தினேன்.”#9:17 யாத். 9:16 18எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகின்றாரோ, அவருக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகின்றாரோ, அவரைக் கடினமாக்குகிறார்.
19உங்களில் ஒருவன் என்னிடம், “அவ்வாறானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? இறைவனுடைய திட்டத்தை எதிர்க்க யாரால் முடியும்?” என்று கேட்கலாம். 20அவ்வாறானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுவதற்கு நீ யார்? வனைந்து உருவாக்கப்பட்டது தன்னை வனைந்தவரிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினீர்?”#9:20 ஏசா. 29:16; 45:9 என்று கேட்கலாமோ? 21ஒரே களிமண்ணிலிருந்து ஒரு பாத்திரத்தை மதிப்புக்காகவும், மற்றொன்றை அவமதிப்புக்காகவும் உருவாக்குவதற்கு குயவனுக்கு களிமண்ணின்மீது உரிமை இல்லையோ?
22இறைவன் தமது கோபத்தை வெளிப்படுத்தவும் தமது வல்லமையை தெரியப்படுத்தவும் விரும்பி, அழிக்கப்படுவதற்காகவே தயார் செய்யப்பட்ட கோபத்தின் பாத்திரங்களை, அதிக பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? 23அத்துடன் இறைவன், மகிமைக்கென முன்பே ஆயத்தம் செய்த இரக்கத்துக்குரிய பாத்திரங்களுக்குத் தன் மகிமையின் பெருநிறைவை வெளிப்படுத்தவும், அவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா? 24நாமும்கூட யூதர்களிலிருந்து மாத்திரமன்றி, யூதரல்லாதவர்களில் இருந்தும் இப்படியாக அழைக்கப்பட்டவர்களாய் இருக்கின்றோம் அல்லவா? 25இதைப்பற்றியே ஓசியாவின் புத்தகத்திலே இறைவன் இவ்வாறு கூறுகின்றார்:
“நான் என்னுடைய மக்கள் அல்லாதவர்களை ‘என்னுடைய மக்கள்’ என்றும்;
அன்பு செய்யப்படாத ஒருத்தியை ‘அன்பு செய்யப்பட்டவள்’ என்றும் அழைப்பேன்”#9:25 ஓசி. 2:23
26மேலும்,
“ ‘நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில்,
அவர்கள் ‘உயிருள்ள இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள்.”#9:26 ஓசி. 1:10
27இறைவாக்கினன் ஏசாயாவும் இஸ்ரயேலரைக் குறித்து,
“இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையின் மணலைப் போல் இருந்தாலும்,
எஞ்சியுள்ள சிறு குழுவினர் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள்.
28கர்த்தர் பூமியின்மேல் தண்டனையை
தீவிரமாகவும் பூரணமாகவும் நிறைவேற்றுவார்”#9:28 ஏசா. 10:22,23
என்று கூறியிருக்கிறார். 29ஏசாயா மீண்டும்,
“எல்லாம் வல்ல கர்த்தர்
நமக்கு ஒரு சந்ததியை விட்டுவைக்காதிருந்தால்,
நாங்கள் சோதோமைப் போலாகி, கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்”#9:29 ஏசா. 1:9முற்றாக அழிந்திருப்போம் என்பது இதன் பொருள்.
என்றும் உரைத்திருக்கிறார்.
இஸ்ரயேலின் அவிசுவாசம்
30அவ்வாறானால் நாம் என்ன சொல்வோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் அதைக் கண்டு அடைந்தார்கள். அதுவே விசுவாசத்தின் மூலமாக வரும் நீதி. 31ஆனால் நீதியை அடையும்படி நீதிச்சட்டத்தைக் கடைப்பிடித்த இஸ்ரயேலரோ, முயற்சித்தும் அதை அடையவில்லை. 32ஏன் அதை அடையவில்லை? அவர்கள் அதனை விசுவாசத்தினாலே தேடாமல், நல்ல செயல்களினால் கிடைக்கும் எனத் தேடி, தடுக்கல்லில் தடுக்கி விழுந்தார்கள். 33இதைப்பற்றியே இப்படி எழுதப்பட்டுள்ளது:
“இதோ நான் சீயோனிலே இடறச் செய்யும் ஒரு கல்லையும்,
வீழ்ந்துவிடச் செய்கின்ற ஒரு கற்பாறையையும் வைக்கின்றேன்.
அவரில் விசுவாசம் வைக்கின்ற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை.”#9:33 ஏசா. 8:14; 28:16
Currently Selected:
ரோமர் 9: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.
