YouVersion Logo
Search Icon

சங்கீதம் 1

1
பகுதி i
சங்கீதம் 1–41
சங்கீதம் 1
1தீயவர்களின் அறிவுரையின்படி நடவாத,
பாவிகளின் வழியில் செல்லாத,
பரிகாசக்காரருடன் கூடி அமராத மனிதர் எவரோ,
அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்#1:1 ஆசீர்வதிக்கப்பட்டவர் மனமகிழ்ச்சியுடையவர் என்றும் மொழிபெயர்க்கலாம்.
2வழிதவறாத இவரோ, கர்த்தரின் வேதத்திலுள்ள கட்டளைகளில்#1:2 வேதத்திலுள்ள கட்டளைகளில் – எபிரேய மொழியில் நீதிச்சட்டத்திலே என்றுள்ளது. மனம் மகிழ்ந்திருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கின்றவர்.
3அவ்வாறானவர், நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு,
பருவ காலத்தில் தன் பழங்களைக் கொடுக்கின்ற,
வாடாத இலைகளோடுள்ள மரத்துக்கு ஒப்பானவர்;
அவர் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.
4தீயவர்களோ#1:4 தீயவர்களோ – இறைவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுப்பதால் நிரந்தரமான குற்ற உணர்வுடன் இருப்பவர் அவ்வாறு இல்லாமல்,
காற்றினால் அடித்துச் செல்லப்படும்
பதரைப் போல் இருக்கின்றார்கள்.
5நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை,
நீதிமான்களின் ஒன்றுகூடலில் பாவிகள் பங்கேற்பதில்லை.
6ஏனெனில் நீதிமான்களின் வழியை கர்த்தர் கவனித்து காக்கின்றார்.
ஆனால் தீயவர்களின் வழியோ அழிவுக்கு இட்டுச் செல்லும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in