ஆகாய் 1:5-6
ஆகாய் 1:5-6 TRV
அதனால் இப்போது சேனைகளின் கர்த்தர் சொல்கின்றதாவது: “உங்கள் வழிகளைக் குறித்து கவனமாய் எண்ணிப் பாருங்கள். நீங்கள் அதிகமாய் விதைத்திருந்தாலும், சிறிதளவே அறுவடை செய்தீர்கள்; நீங்கள் சாப்பிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை; நீங்கள் பானம் அருந்துகிறீர்கள், ஆனால் உங்கள் தாகம் ஒருபோதும் தீருவதில்லை. ஆடைகளை அணிந்துகொள்கின்றீர்கள், குளிரோ உங்களைவிட்டுப் போவதில்லை. நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் அதை ஓட்டையான பையிலே போடுகின்றீர்கள்.”





