YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 2:11-12

யாத்திராகமம் 2:11-12 TRV

மோசே வளர்ந்த பின்னர் ஒருநாள், தன் சொந்த எபிரேய மக்கள் இருக்கும் இடத்துக்குப் போய், அங்கு அவர்கள் கடினமான வேலை செய்வதைப் பார்த்தார். தன் சொந்த மக்களுள் ஒருவனான ஒரு எபிரேயனை ஒரு எகிப்தியன் அடிப்பதை அவர் கண்டார். மோசே இங்கும் அங்கும் பார்த்து, ஒருவரும் இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனைக் கொன்று மணலில் மறைத்து வைத்தார்.