ஆமோஸ் 9:13-14
ஆமோஸ் 9:13-14 TRV
“நாட்கள் வருகின்றன” என்று கர்த்தர் அறிவிக்கின்றார். “அப்போது அறுவடை செய்கின்றவனை உழுகிறவன் முந்திக்கொள்வான். நடுகிறவனை திராட்சைப்பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான். மலைகளிலிருந்து புது திராட்சைரசம் வடிந்து எல்லாக் குன்றுகளின்மீதும் ஓடும், நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருவேன். “அவர்கள் பாழடைந்த பட்டணங்களை மீளக்கட்டியெழுப்பி, அவற்றில் குடியிருந்து, திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.





