1
1என்னால் மட்டுமன்றி, சத்தியத்தை அறிந்த அனைவராலும் சத்தியத்தின்படி அன்பு செய்யப்படுகின்றவளும், இறைவனால்#1:1 இறைவனால் – மூலமொழியில் இல்லை. தெரிவுசெய்யப்பட்டவளுமாகிய அம்மையாருக்கும் அவரது பிள்ளைகளுக்கும்,
மூப்பராகிய நான் எழுதுவது: 2நம்மில் நிலைபெற்று, என்றென்றும் நம்மோடு நிலைத்திருக்கும் சத்தியத்தின் காரணமாகவே அவர்களை அன்பு செய்கின்றேன்.
3பிதாவாகிய இறைவனிடமிருந்தும், பிதாவின் மகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வருகின்ற கிருபையும் இரக்கமும் சமாதானமும், நம் அனைவரோடும் சத்தியத்திலும் அன்பிலும் இருப்பதாக.
4பிதா நமக்குக் கட்டளையிட்டபடியே, உங்களது பிள்ளைகளில் சிலர் சத்தியத்தின்படி நடப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். 5இப்போதும் அன்பான அம்மையாரே! நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதாமல், ஆரம்பத்திலிருந்தே நமக்கிருந்த கட்டளையையே எழுதுகிறேன். அதாவது, நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதாகக் கேட்டுக்கொள்கிறேன். 6நாம் இறைவனுடைய கட்டளைகளின்படி நடப்பதே அன்பாகும். நீங்கள் ஆரம்பத்திலிருந்து கேள்விப்பட்டிருக்கின்றபடி இதுவே அவருடைய கட்டளையாகும், ஆகவே அதில் நீங்கள் நடக்க வேண்டும்.
7ஏனெனில், இயேசு கிறிஸ்து மனித உடலில் வந்தார் என்பதை அறிக்கை செய்யாத பல ஏமாற்றுக்காரர்கள் உலகமெங்கும் சென்றிருக்கிறார்கள். இத்தகைய எவனும் ஏமாற்றுக்காரனாகவும் போலி கிறிஸ்துவுமாக#1:7 போலி கிறிஸ்துவுமாக – அந்திக் கிறிஸ்து என்றும் மொழிபெயர்க்கலாம் இருக்கின்றான். 8ஆகவே எங்கள்#1:8 எங்கள் – சில மொழிபெயர்ப்புகளில் உங்கள் என்றுள்ளது. உழைப்பின் பலனை நீங்கள் இழந்து போகாமல், அதற்கான வெகுமதியை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விழிப்பாக இருங்கள். 9கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல், எல்லைமீறிச் செல்கின்ற எவனும் இறைவனை உடையவன் அல்ல. அந்தப் போதனையில் நிலைத்திருக்கின்றவனே பிதாவையும் மகனையும் உடையவனாயிருக்கிறான். 10உங்களிடம் வருகின்ற எவனாயினும் இந்த போதனையைக் கொண்டுவராவிட்டால், அவனை உங்களுடைய வீட்டுக்குள் ஏற்றுக்கொள்ளவோ வரவேற்கவோ வேண்டாம். 11ஏனெனில், அவ்வாறான ஒருவனை வரவேற்கின்ற எவனும், அவனுடைய தீய செயலில் பங்கெடுக்கின்றான்.
12உங்களுக்கு எழுத வேண்டிய விடயங்கள் அநேகம் உள்ளன. அதற்காக நான் காகிதத்தையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. மாறாக நமது மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்படி, நான் உங்களிடம் வந்து, உங்களுடன் நேருக்கு நேராகப் பேசலாம் என நம்பியிருக்கின்றேன்.
13தெரிவுசெய்யப்பட்ட உங்கள் சகோதரியின் பிள்ளைகளும், உங்களை வாழ்த்துகின்றார்கள்.