YouVersion Logo
Search Icon

1 நாளாகமம் 1

1
ஆதாமின் சந்ததியினர்
நோவாவின் மகன்மார் வரை
1ஆதாம், சேத், ஏனோஸ்,
2கேனான், மகலாலெயேல், யாரேத்,
3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
நோவா ஆகியோர்.
4நோவாவின் மகன்மார்: சேம், காம், யாப்பேத்.
யாபேத்தியர்கள்
5யாப்பேத்தின் மகன்மார்:
கோமேர், மாகோக், மாதாய், யாவான், தூபால், மேசேக், தீராஸ்.
6கோமேரின் மகன்மார்:
அஸ்கேனாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
7யாவானின் மகன்மார்:
எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.
காமியர்கள்
8காமின் மகன்மார்:
கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
9கூஷின் மகன்மார்:
சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்.
ராமாவின் மகன்மார்:
சேபா, தேதான்.
10கூஷின் மகன் நிம்ரோத்;
இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
11மிஸ்ராயீமின் சந்ததிகள்:
லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், 12பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தொரியர்.
13கானானின் சந்ததிகள்:
மூத்த மகன் சீதோன், ஏத்து, 14எபூசியர், எமோரியர், கிர்காசியர், 15ஏவியர், அர்கீயர், சீனியர், 16அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
சேமியர்கள்
17சேமின் மகன்மார்:
ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
ஆராமின் மகன்மார்:
ஊஸ், கூல், கேத்தெர், மேசேக்.
18அர்பக்சாத் சேலாவின் தந்தை, சேலா
ஏபேரின் தந்தை.
19ஏபேருக்கு இரண்டு மகன்மார் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு,#1:19 பேலேகு என்றால் எபிரேய மொழியில் பிரித்தல் என்று பொருள்.
ஏனெனில் அவனது காலத்திலேயே பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி பேசும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
20யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப்,
அசர்மாவேத், யேராகு, 21அதோராம், ஊசால், திக்லா, 22ஏபால், அபிமாயேல், சேபா, 23ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தந்தை. இவர்களே யொக்தானின் மகன்மார்.
24சேம், அர்பக்சாத், சேலா,
25ஏபேர், பேலேகு, ரெகூ,
26செரூகு, நாகோர், தேராகு,
27ஆபிராம் எனப்பட்ட ஆபிரகாம்.
ஆபிரகாமின் குடும்பம்
28ஆபிரகாமின் மகன்மார்: ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
ஆகாரின் சந்ததி
29இவர்களின் சந்ததிகள்:
நெபாயொத் இஸ்மவேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்; 30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்.
இவர்கள் இஸ்மவேலின் மகன்மார்.
கேத்தூராளின் சந்ததி
32ஆபிரகாமின் மறுமனைவி கேத்தூராள் பெற்ற மகன்மார்:
சிம்ரான், யொக்ஷான், மெதான், மீதியான், இஸ்பாக், சூவா.
யொக்ஷானின் மகன்மார்:
சேபா, தேதான்.
33மீதியானின் மகன்மார்:
ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா.
இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.
சாராளின் சந்ததி
34ஆபிரகாம் ஈசாக்கின் தந்தை,
ஈசாக்கின் மகன்மார்:
ஏசா, இஸ்ரயேல்.
ஈசாக்கின் மகன்மார்
35ஏசாவின் மகன்மார்:
எலிப்பாஸ், ரெகுயேல், யெயூஷ், யாலாம், கோரா.
36எலிப்பாஸின் மகன்மார்:
தேமான், ஓமார், செப்போ#1:36 செப்போ அல்லது செப்பி, கத்தாம், கேனாஸ்;
திம்னாள் என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.
37ரெகுயேலின் மகன்மார்:
நகத், சேரா, ஷம்மா, மீசா.
ஏதோமில் சேயீரின் மக்கள்
38சேயீரின் மகன்மார்:
லோத்தான், சோபால், சிபெயோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.
39லோத்தானின் மகன்மார்:
ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னா லோத்தானின் சகோதரி.
40சோபாலின் மகன்மார்:
அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம்.
சிபெயோனின் மகன்மார்:
ஆயா, ஆனாகு.
41ஆனாகின் மகன்:
திஷோன்.
திஷோனுடைய மகன்மார்:
எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
42ஏசேருடைய மகன்மார்:
பில்கான், சாவன், யாக்கான்.
திஷோனுடைய மகன்மார்:
ஊஸ், அரான்.
ஏதோமின் ஆளுநர்கள்
43இஸ்ரயேல் மக்களை அரசர் ஒருவர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்:
பேயோரின் மகன் பேலா; அவனுடைய தலைநகரம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
44பேலா மரணித்த பின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப் பின் அரசனானான்.
45யோபாப் மரணித்த பின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
46உஷாம் மரணித்த பின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை தோற்கடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
47ஆதாத் மரணித்த பின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
48சம்லா மரணித்த பின்பு, யூப்ரட்டீஸ்#1:48 யூப்ரட்டீஸ் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. நதியின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
49சாவூல் மரணித்த பின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்-கானான் அரசனானான்.
50பாகால்-கானான் மரணித்த பின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மே-சகாப்பின் பேத்தியுமாவாள். 51ஆதாத்தும் மரணித்தான்.
ஏதோமின் பிரதானமானவர்கள்:
திம்னா, அல்வா, யேதேத், 52ஒகோலிபாமா, ஏலா, பினோன், 53கேனாஸ், தேமான், மிப்சார், 54மக்தியேல், ஈராம்.
இவர்களே ஏதோமின் தலைவர்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in