தானியேலின் புத்தகம் 5:25-28
தானியேலின் புத்தகம் 5:25-28 TAERV
சுவரில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின். “இதுதான் அவ்வார்த்தைகளின் பொருள்: மெனே : உன் ஆளுகை முடியும் நாட்களைத் தேவன் எண்ணி வைத்திருக்கிறார். தெக்கேல் : நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாய் காணப்பட்டாய். உப்பார்சின் : உன் ஆளுகை உன்னிடமிருந்து எடுக்கப்பட்டு, அது மேதியருக்கும் பெர்சியருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும்” என்றான்.





