ஏக்கந்துர நானு கும்புடுவோருவு, நன்னுன அவுரோட சொந்தா அந்து ஏளுவோராத தேவரோட தூதாளு நன்னொத்ர பந்து நிந்து, ‘பவுலே, அஞ்சுபேடா; நிய்யி ரோமரோட தொட்டு ராஜாவியெ முந்தால விசாரணெயெ நில்லுபேக்கு. இதே நோடு, தேவரு அவுரோட கருணெனால நினியாக நின்னுகூட பயணமாடுவுது எல்லாருனவு உசுரோட இருவுக்கு மாடுவுரு’ அந்தேளிதா.