செப்பனியா 3:14-15 - Compare All Versions

செப்பனியா 3:14-15 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

சீயோன் மகளே, பாடு; இஸ்ரயேலே, பலமாய்ச் சத்தமிடு; எருசலேம் மகளே, உன் முழு உள்ளத்தோடும் மகிழ்ந்து களிகூரு. யெகோவா உன் தண்டனையை நீக்கிப்போட்டார், அவர் உன் பகைவரைத் துரத்திவிட்டார். இஸ்ரயேலின் அரசனாகிய யெகோவாவே உன்னுடன் இருக்கிறார்; நீ இனி ஒருபோதும் எவ்வித தீங்கைக் குறித்தும் பயப்படமாட்டாய்.

செப்பனியா 3:14-15 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மகளாகிய சீயோனே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. யெகோவா உன் ஆக்கினைகளை அகற்றி, உன் எதிரிகளை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.

செப்பனியா 3:14-15 TAERV (பரிசுத்த பைபிள்)

எருசலேமே, பாடு, மகிழ்ச்சியாக இரு, இஸ்ரவேலே சந்தோஷமாகச் சத்தமிடு. எருசலேமே, மகிழ்ச்சியாக இரு, களிகூரு. ஏனென்றால், கர்த்தர் உனது தண்டனையை நிறுத்திவிட்டார். அவர் உனது பகைவர்களின் உறுதியான கோபுரங்களை அழித்தார். இஸ்ரவேலின் ராஜாவே, கர்த்தர் உன்னோடு உள்ளார். எத்தீமையும் நிகழுவதைக்குறித்து நீ கவலைப்பட வேண்டாம்.

செப்பனியா 3:14-15 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.