உன்னதப்பாட்டு 5:6
உன்னதப்பாட்டு 5:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன், ஆனால் என் காதலரோ அங்கு இல்லை; அவர் போய்விட்டார். அதினால் என் உள்ளம் ஏங்கியது. நான் அவரைத் தேடினேன்; அவரைக் காணவில்லை. நான் கூப்பிட்டேன்; அவர் பதில் கொடுக்கவில்லை.
உன்னதப்பாட்டு 5:6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.
உன்னதப்பாட்டு 5:6 பரிசுத்த பைபிள் (TAERV)
என் நேசருக்காகத் திறந்தேன் ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை. அவர் வந்துபோனபோது நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன். நான் அவரைத் தேடினேன் ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. நான் அவரை அழைத்தேன் ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை.