ரூத் 4:17-22
ரூத் 4:17-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அங்கு வாழ்ந்த பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் கிடைத்திருக்கிறான்” என்று சொல்லி அவனுக்கு, “ஓபேத்” என்று பெயரிட்டார்கள். அவனே தாவீதின் தகப்பனான ஈசாயின் தகப்பன். பேரேசின் குடும்ப அட்டவணை இதுவே: பேரேஸ் எஸ்ரோனின் தகப்பன், எஸ்ரோன் ராமின் தகப்பன், ராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன், சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸ் ஓபேதின் தகப்பன், ஓபேத் ஈசாயின் தகப்பன், ஈசாய் தாவீதின் தகப்பன்.
ரூத் 4:17-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன். பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான். எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான். அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான். சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான். ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
ரூத் 4:17-22 பரிசுத்த பைபிள் (TAERV)
அயல் வீட்டுப் பெண்கள், “இந்த பையன் நகோமிக்காக பிறந்தவன்” என்றனர். அவர்கள் அவனுக்கு ஓபேத் என்று பேரிட்டனர். அவன் ஈசாயின் தந்தையானான். ஈசாய் ராஜாவாகிய தாவீதின் தந்தையானான். இது பேரேசுடைய குடும்பத்தின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனின் தந்தையானான். எஸ்ரோன் ராமின் தந்தையானான். ராம் அம்மினதாபின் தந்தையானான். அம்மினதாப் நகசோனின் தந்தையானான். நகசோன் சல்மோனின் தந்தையானான். சல்மோன் போவாஸின் தந்தையானான். போவாஸ் ஓபேதின் தந்தையானான். ஓபேத் ஈசாயின் தந்தையானான். ஈசாய் தாவீதின் தந்தையானான்.
ரூத் 4:17-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன். பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான். எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான். அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான். சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான். ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.