ரோமர் 3:10-18

ரோமர் 3:10-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அத்துடன் வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை; விளங்கிக்கொள்கிறவன் ஒருவனுமில்லை, இறைவனைத் தேடுகிறவன் ஒருவனுமில்லை. எல்லோரும் வழிவிலகி, ஒன்றாக உதவாதவர்களாய்ப் போய்விட்டார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலுமில்லை.” “அவர்களுடைய தொண்டைகள்; திறந்திருக்கிறப் பிரேதக்குழிகள்.” “அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன. விரியன் பாம்புகளின் விஷம் அவர்கள் உதடுகளில் இருக்கிறது.” “அவர்களுடைய வாய்கள் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றன.” “அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன; அழிவும் அவலமும் அவர்கள் வழிகளைப் பின்பற்றுகின்றன. சமாதான வழியோ, அவர்களுக்குத் தெரியாது.” “அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.”

ரோமர் 3:10-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்படியே: “ஒருவன்கூட நீதிமான் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிக்கிறதினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது; நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது; சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை” என்று எழுதியிருக்கிறதே.

ரோமர் 3:10-18 பரிசுத்த பைபிள் (TAERV)

எழுதப்பட்டபடி, “சரியானவன் ஒருவன் கூட இல்லை. புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை. உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை. எல்லோரும் வழிதப்பியவர்கள். எல்லோருமே பயனற்றுப்போனவர்கள். நல்லவை செய்பவன் ஒருவனாகிலும் இல்லை.” “அவர்களின் வாய்கள் திறந்த சவக் குழிகள் போன்றவை; தங்கள் நாக்குகளை பொய் சொல்லவே பயன்படுத்துகிறார்கள்.” “அவர்கள் சொல்லும் காரியங்கள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது.” “அவர்களது வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்துள்ளது.” “அவர்கள் எப்போதும் தாக்கவும் கொலை செய்யவும் தயாராக உள்ளனர். அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன. அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.” “அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.”

ரோமர் 3:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது. அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது. நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது; சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.