ரோமர் 11:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 11:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
ரோமர் 11:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.
ரோமர் 11:8 TAERV (பரிசுத்த பைபிள்)
“மக்களின் உணர்ச்சியை தேவன் மறக்கச் செய்தார்” என்றும் அதனால், “தேவன் அவர்களின் கண்களை மூடினார்.” “அதனால் அவர்களால் உண்மையைப் பார்க்க முடியவில்லை. தேவன் அவர்களின் காதுகளை மூடினார். அதனால் அவர்களால் உண்மையாகக் கேட்க முடியவில்லை. இது இன்றும் தொடர்கிறது.” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
ரோமர் 11:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இது வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “இறைவன் அவர்களுக்கு ஒரு மந்தமுள்ள ஆவியைக் கொடுத்தார். இதனால் இன்றுவரை அவர்கள் தங்களுடைய கண்களினால் காணமுடியாதவர்களாயும், காதுகளால் கேட்க முடியாதவர்களாயும் இருக்கிறார்கள்.”