சங்கீதம் 94:1-7 - Compare All Versions

சங்கீதம் 94:1-7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நீதியைச் சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும். கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமை பாராட்டுவார்கள்? கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

சங்கீதம் 94:1-7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும். யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து, எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்? எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி, கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். விதவையையும் அந்நியனையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: யெகோவா பார்க்கமாட்டார், யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

சங்கீதம் 94:1-7 TAERV (பரிசுத்த பைபிள்)

கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன். நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன். நீர் முழு பூமிக்கும் நீதிபதி. பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும். கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்? எதுவரைக்கும் அக்குற்றவாளிகள் அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்? கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள். உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள். அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள். பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள். அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதை கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

சங்கீதம் 94:1-7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனாகிய யெகோவாவே, அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனே, பிரகாசியும். பூமியின் நீதிபதியே, எழுந்தருளும்; பெருமை உள்ளவர்களுக்குத் தக்கபடி பதிலளியும். எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, கொடியவர்கள், எவ்வளவு காலத்திற்கு கொடியவர்கள் களிகூர்ந்திருப்பார்கள்? அவர்கள் அகங்காரமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்; தீமை செய்வோர் யாவரும் பெருமை நிறைந்து பேசுகிறார்கள். யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்; உமது உரிமைச்சொத்தை ஒடுக்குகிறார்கள். விதவைகளையும் வேறுநாட்டைச் சேர்ந்தவரையும் அவர்கள் அழிக்கிறார்கள்; அவர்கள் தந்தையற்றவர்களைக் கொலைசெய்கிறார்கள். “யெகோவா இவற்றைக் காண்பதில்லை, யாக்கோபின் இறைவன் இவற்றைக் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார்கள்.