சங்கீதம் 75:5-7 - Compare All Versions
சங்கீதம் 75:5-7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ” கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது. ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.
சங்கீதம் 75:5-7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
சங்கீதம் 75:4-7 TAERV (பரிசுத்த பைபிள்)
“சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’ ‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார். ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை எதுவும் இப்பூமியில் இல்லை. தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார். தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார். தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
சங்கீதம் 75:5-7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். கிழக்கிலும், மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.