சங்கீதம் 57:10-11 - Compare All Versions

சங்கீதம் 57:10-11 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.

சங்கீதம் 57:10-11 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

உமது கிருபை வானம்வரையும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

சங்கீதம் 57:10-11 TAERV (பரிசுத்த பைபிள்)

உமது உண்மையான அன்பு வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது. தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார். அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.

சங்கீதம் 57:10-11 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.