சங்கீதம் 28:6-7 - Compare All Versions
சங்கீதம் 28:6-7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார். யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.
சங்கீதம் 28:6-7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 28:6-7 TAERV (பரிசுத்த பைபிள்)
கர்த்தரைத் துதிப்பேன், இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார். கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம். அவரை நம்பினேன். அவர் எனக்கு உதவினார். நான் மிகவும் மகிழ்கிறேன்! அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
சங்கீதம் 28:6-7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். கர்த்தர் என் பெலனும், என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.