சங்கீதம் 27:12-14
சங்கீதம் 27:12-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும் என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். நானோ வாழ்வோரின் நாட்டில் யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். யெகோவாவுக்குக் காத்திரு; பெலன்கொண்டு தைரியமாயிரு, யெகோவாவுக்கே காத்திரு.
சங்கீதம் 27:12-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள். நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன். யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.
சங்கீதம் 27:12-14 பரிசுத்த பைபிள் (TAERV)
எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள். என்னைப்பற்றி பொய்யுரைத்தனர். என்னைத் துன்புறுத்த பொய் கூறினர். நான் மரிக்கும் முன்னர் கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன். கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு. பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.
சங்கீதம் 27:12-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.