சங்கீதம் 134:1-3
சங்கீதம் 134:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே, எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள். பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, யெகோவாவைத் துதியுங்கள். வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
சங்கீதம் 134:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
சங்கீதம் 134:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்! இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள். ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி கர்த்தரைப் போற்றுங்கள். கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
சங்கீதம் 134:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.