சங்கீதம் 125:1-3
சங்கீதம் 125:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள். மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் தமது மக்களைச் சுற்றியிருக்கிறார். நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் தங்கள் கைகளை நீட்டலாம்.
சங்கீதம் 125:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள். மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார். நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
சங்கீதம் 125:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள். அவர்கள் அசைக்கப்படுவதில்லை. அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள். எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார். நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
சங்கீதம் 125:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.