நீதிமொழிகள் 31:6-7 - Compare All Versions

நீதிமொழிகள் 31:6-7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அழிந்து போகிறவர்களுக்கு மதுபானத்தைக் கொடு, வேதனையிலுள்ளவர்களுக்கு திராட்சை மதுவைக் கொடு! அவர்கள் குடித்துத் தங்கள் வறுமையை மறக்கட்டும், தங்கள் துயரத்தை ஒருபோதும் நினையாதிருக்கட்டும்.

நீதிமொழிகள் 31:6-7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.

நீதிமொழிகள் 31:6-7 TAERV (பரிசுத்த பைபிள்)

ஏழை ஜனங்களுக்கு மதுவைக்கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக்கொடு. பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.

நீதிமொழிகள் 31:6-7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்; அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.