எண்ணாகமம் 36:12 - Compare All Versions

எண்ணாகமம் 36:12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அவர்கள் யோசேப்பின் மகன் மனாசேயின் சந்ததிகளின் வம்சங்களுக்குள்ளே திருமணம் செய்துகொண்டார்கள். அதனால் அவர்களுடைய உரிமைச்சொத்து, அவர்களுடைய தகப்பனின் வம்சத்திற்குள்ளும், கோத்திரத்திற்குள்ளும் தொடர்ந்து இருந்தது.

எண்ணாகமம் 36:12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடு இருந்தது.

எண்ணாகமம் 36:12 TAERV (பரிசுத்த பைபிள்)

அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் கோத்திரத்தினரை மணந்துகொண்டபடியால் அவர்களின் சொத்தானது அக்கோத்திரத்திற்குள்ளேயே இருந்தது.

எண்ணாகமம் 36:12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது.