எண்ணாகமம் 23:7 - Compare All Versions

எண்ணாகமம் 23:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அங்கே பிலேயாம் இறைவாக்குரைத்துச் சொன்னதாவது: “பாலாக் என்னை ஆராமிலிருந்து கொண்டுவந்தான், மோவாபின் அரசன் கிழக்கு மலைகளிலிருந்து கொண்டுவந்தான். ‘வா,’ எனக்காக யாக்கோபைச் ‘சபி; வந்து இஸ்ரயேலைப் பகிரங்கமாகக் குற்றப்படுத்து’ என்றான்.

எண்ணாகமம் 23:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான்.

எண்ணாகமம் 23:7 TAERV (பரிசுத்த பைபிள்)

பிறகு பிலேயாம் பின்வருமாறு சொன்னான்: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னை இங்கே அழைத்து வந்தான். ஆராம் மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்தேன். பாலாக் என்னிடம், “வா, வந்து எனக்காக யாக்கோபிற்கு எதிராகப் பேச வேண்டும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் பேச வேண்டும்” என்று கேட்டான்.

எண்ணாகமம் 23:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.