நெகேமியா 13:25
நெகேமியா 13:25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதனால் நான் அவர்களைக் கடிந்துகொண்டு சாபத்தை அவர்கள்மேல் வருவித்தேன். அவர்களில் ஒரு சிலரை அடித்து, அவர்கள் தலைமயிரையும் பிடுங்கினேன். நான் அவர்களை இறைவனுடைய பெயரில் ஆணையிடும்படி செய்து, “நீங்கள் அவர்களுடைய மகன்களுக்கு உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்றும், உங்களுக்கோ உங்களுடைய மகன்களுக்கோ அவர்களுடைய மகள்களை திருமணத்திற்கென எடுக்கக்கூடாது என்றும்
நெகேமியா 13:25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களில் ஒருவரையும் உங்கள் மகன்களுக்காவது உங்களுக்காவது எடுக்காமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடச்செய்து, நான் அவர்களை நோக்கி
நெகேமியா 13:25 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே நான் அந்த மனிதர்களிடம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொன்னேன். நான் அவர்களிடம் கடின வார்த்தைகளைச் சொன்னேன். அத்தகைய மனிதர் சிலரை நான் அடித்தேன். நான் அவர்களின் தலைமயிரைப் பிடித்து இழுத்தேன். நான் அவர்களை தேவனுடைய பேரால் வாக்குறுதியளிக்குமாறு பலவந்தப்படுத்தினேன். நான் அவர்களிடம், “நீங்கள் அந்த ஜனங்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது. உங்கள் குமாரர்களை அயல்நாட்டு ஜனங்களின் பெண்கள் மணந்துகொள்ளும்படி விடக்கூடாது. உங்கள் குமாரத்திகளை அயல்நாட்டு ஜனங்களின் குமாரர்களை மணந்துகொள்ளும்படிவிடக் கூடாது.
நெகேமியா 13:25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி