நாகூம் 3:5 - Compare All Versions
நாகூம் 3:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதோ, சேனைகளின் யெகோவா சொல்கிறார்: “நினிவேயே, நான் உனக்கு விரோதமாய் வந்து, உன் ஆடையை உன் முகத்துக்கு மேலாக தூக்குவேன்; நாடுகளுக்கு உன் நிர்வாணத்தையும், எல்லா அரசுகளுக்கும் உன் வெட்கத்தையும் காட்டுவேன்.
பகிர்
நாகூம் 3 TCVநாகூம் 3:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி
பகிர்
நாகூம் 3 IRVTAMநாகூம் 3:5 TAERV (பரிசுத்த பைபிள்)
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன். நான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன். அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும்.
பகிர்
நாகூம் 3 TAERVநாகூம் 3:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும், ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி
பகிர்
நாகூம் 3 TAOVBSI