யோசுவா 23:9-10
யோசுவா 23:9-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இதன் நிமித்தமே யெகோவா பெரிதும் வல்லமையுள்ளதுமான நாடுகளை உங்கள் முன்பாகத் துரத்தியடித்துள்ளார். இன்றுவரை ஒருவராலும் உங்களை எதிர்த்துநிற்க முடியவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்களித்தபடி, அவரே உங்களுக்காகப் போராடுவதனால் உங்களில் ஒருவன் ஆயிரம்பேரை எதிர்த்து முறியடிக்கிறான்.
யோசுவா 23:9-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான தேசங்களைத் துரத்தியிருக்கிறார்; இந்த நாள்வரைக்கும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை. உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, அவரே உங்களுக்காக யுத்தம்செய்கிறார்.
யோசுவா 23:9-10 பரிசுத்த பைபிள் (TAERV)
“பெரிய, வல்லமையான தேசங்களை வெல்வதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவினார். அவர்கள் அங்கிருந்து போகும்படியாக கர்த்தர் துரத்தினார். உங்களைத் தோற்கடிக்க எந்தத் தேசத்தாலும் முடியவில்லை. கர்த்தருடைய உதவியோடு, இஸ்ரவேலரில் ஒருவன் 1,000 பகைவீரர்களை வெல்ல முடிந்தது. ஏனெனில் கர்த்தர் உங்களுக்காகப் போர் செய்கிறார். கர்த்தர் இதைச் செய்வதாக வாக்களித்தார்.
யோசுவா 23:9-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை. உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.