யோபு 40:15-24

யோபு 40:15-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும். இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும். தழைகளின் நிழல் அதைக்கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும். இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?

யோபு 40:15-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இப்பொழுது உன்னோடுகூட நான் படைத்த நீர்யானையைப் பார்; அது எருதைப் போலவே புல் மேய்கிறது. அதின் இடுப்பிலுள்ள பலம் எவ்வளவு? அதின் வயிற்றின் தசைநார்களின் வலிமை எவ்வளவு? அதின் வால் கேதுரு மரத்தைப்போல் அசைகிறது; அதின் இடுப்பு நரம்புகள் நெருக்கமாகப் பிணைந்திருக்கின்றன. அதின் எலும்புகள் வெண்கலக் குழாய்களாகவும், கால்கள் இரும்புத் தூண்களைப் போலவும் இருக்கின்றன. இறைவனின் படைப்புகளில் இதுவே முதலிடம் பெறுகிறது; இருந்தும் அதைத் தமது வாளுடன் அணுக அதைப் படைத்தவரால் முடியும். குன்றுகள் விளைச்சலைக் கொடுக்கும்; காட்டு விலங்குகளெல்லாம் அதனருகில் விளையாடும். அது தாமரையின் கீழும், நாணலின் மறைவில் சேற்றிலும் படுத்துக்கொள்ளும். தாமரைகளின் நிழல் அதை மூடுகின்றன; ஆற்றலறிகள் அதைச் சூழ்ந்து நிற்கின்றன. ஆறு பெருக்கெடுக்கும்போது அது திகிலடைவதில்லை; யோர்தான் நதி அதின் வாய்க்கெதிராகப் பெருக்கெடுத்து ஓடினாலும், அது உறுதியாயிருக்கும். அது பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?

யோபு 40:15-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், சேற்றிலும் படுத்துக்கொள்ளும். தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும். இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?

யோபு 40:15-24 பரிசுத்த பைபிள் (TAERV)

“யோபுவே, பிகெமோத்தை நீ கவனித்துப்பார். நான் (தேவன்) பிகெமோத்தை உண்டாக்கினேன், உன்னையும் உண்டாக்கினேன். பிகெமோத் பசுவைப்போல, புல்லைத் தின்கிறது. பிகெமோத்தின் உடம்பு மிகுந்த வல்லமை பொருந்தியது. அதன் வயிற்றின் தசைகள் வல்லமை மிக்கவை. பிகெமோத்தின் வால் கேதுரு மரத்தைப் போல் ஆற்றலோடு காணப்படுகிறது. அதன் கால் தசைகள் மிகுந்த பலமுள்ளவை. பிகெமோத்தின் எலும்புகள் வெண்கலம் போன்று பலமுள்ளவை. அதன் கால்கள் இரும்புக் கம்பிகளைப் போன்றவை. நான் (தேவன்) உண்டாக்கிய மிருகங்களுள் பிகெமோத் மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் நான் அதை வெல்ல (தோற்கடிக்க) முடியும். காட்டு மிருகங்கள் விளையாடும் மலைகளில் வளரும் புல்லைப் பிகெமோத் தின்கிறது. தாமரைக் கொடிகளின் கீழே பிகெமோத் படுத்திருக்கிறது. அது உளையிலுள்ள (சேற்றிலுள்ள) நாணல்களின் கீழ் மறைந்துக்கொள்ளும். தாமரைக் கொடிகள் அவற்றின் நிழலில் பிகெமோத்தை மறைக்கும். நதியருகே வளரும் அலரி மரங்களின் கீழே அது வாழும். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பிகெமோத் ஓடிப்போய்விடாது. யோர்தான் நதியின் தண்ணீர் அதன் முகத்தில் அடித்தாலும் அது அஞ்சாது. பிகெமோத்தின் கண்களை ஒருவனும் குருடாக்கி அதனை வலையில் அகப்படுத்தவும் முடியாது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்