யோபு 36:26-28
யோபு 36:26-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்! அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை. “அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து, அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார். மேகங்கள் மழையைப் பொழிகின்றன, அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது.
யோபு 36:26-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது. அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.
யோபு 36:26-28 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆம், தேவன் மேன்னைமயானவர். ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது. “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து, அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார். ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன. மழை பலர் மீது பெய்கிறது.
யோபு 36:26-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது. அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது. அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.