யோபு 26:13-14
யோபு 26:13-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின; அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது. இவை அவருடைய செயல்களில் வெளிப்புற விளிம்பு மட்டுமே; அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்டது மிகக் கொஞ்சமே; அப்படியானால் அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை விளங்கிக்கொள்பவன் யார்?”
யோபு 26:13-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.
யோபு 26:13-14 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும். தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது. தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே. தேவனிடமிருந்து ஒரு சிறிய இரகசிய ஒலியையே நாம் கேட்கிறோம். தேவன் எத்தனை மேன்மையானவரும் வல்லமையுள்ளவரும் என்பதை ஒருவனும் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது” என்றான்.
யோபு 26:13-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று. இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.