யோவான் 17:14 - Compare All Versions

யோவான் 17:14 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நான் இவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். உலகமோ இவர்களை வெறுத்திருக்கிறது. ஏனெனில் நான் உலகத்திற்கு உரியவனாய் இராததுபோல, இவர்களும் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல.

யோவான் 17:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

யோவான் 17:14 TAERV (பரிசுத்த பைபிள்)

உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.

யோவான் 17:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.