ஏசாயா 63:7-9

ஏசாயா 63:7-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவினுடைய இரக்கத்தையும், அவர் புகழப்பட வேண்டிய செயல்களையும் நான் எடுத்துரைப்பேன். யெகோவா எங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத் தக்கதாகவும், அவருடைய இரக்கத்தின்படியும், அவருடைய தயவுகளின் படியும், அவர் இஸ்ரயேல் குடும்பத்திற்குச் செய்த அநேக நற்செயல்களையும் நான் பறைசாற்றுவேன். அவர், “இவர்கள் நிச்சயமாய் எனது மக்கள், எனக்கு வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்றார்; மேலும், அவர் அவர்களின் இரட்சகரானார். அவர்களின் வேதனைகளிலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதன் அவர்களை இரட்சித்தான். தமது அன்பினாலும் கருணையினாலும் அவர்களை மீட்டார்; அவர் பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.

ஏசாயா 63:7-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், யெகோவாவுடைய செயல்களையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன். அவர்கள் என் மக்கள்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார். அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை காப்பாற்றினார் அவர் தமது அன்பின் காரணமாகவும், தமது பரிதாபத்தின் காரணமாகவும் அவர்களை விடுவித்தது, ஆரம்ப நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

ஏசாயா 63:7-9 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் தயவாக இருக்கிறார் என்று நினைவுகொள்வேன். கர்த்தரைத் துதிக்க நான் நினைவுகொள்வேன். கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பல நல்லவற்றைக் கொடுத்தார். கர்த்தர் எங்களோடு மிகத் தயவோடு இருந்திருக்கிறார். கர்த்தர் எங்களிடம் இரக்கம் காட்டினார். கர்த்தர், “இவர்கள் என்னுடைய ஜனங்கள். இவர்கள் என்னுடைய மெய்யான பிள்ளைகள்” என்றார். எனவே கர்த்தர் அந்த ஜனங்களைக் காப்பாற்றினார். ஜனங்களுக்கு நிறைய துன்பங்கள் இருந்தன. ஆனால் கர்த்தர் அவர்களுக்கு எதிராக இல்லை. கர்த்தர் ஜனங்களை நேசித்தார். அவர்களுக்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர் அவர்களைக் காப்பாற்றினார். அவர் தமது சிறப்பான தூதனை அவர்களைக் காப்பாற்ற அனுப்பினார். கர்த்தர் என்றென்றும் அவர்களிடம் அக்கறைகொண்டார். கர்த்தர் அந்த ஜனங்களுக்காக அக்கறைகொள்வதை நிறுத்த விரும்பவில்லை.

ஏசாயா 63:7-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன். அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார். அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்