ஏசாயா 51:6
ஏசாயா 51:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள், கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்; வானங்கள் புகையைப்போல் மறையும், பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்; அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள். ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும், எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை.
ஏசாயா 51:6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
ஏசாயா 51:6 பரிசுத்த பைபிள் (TAERV)
வானத்தைப் பாருங்கள்! கீழே உள்ள பூமியில் உங்களைச் சுற்றிப் பாருங்கள் வானங்கள் மறைந்து போகும், மேகம் புகையைப்போன்றும், பூமியானது பயனற்ற பழைய ஆடைகளைப்போன்றும் ஆகும். பூமியிலுள்ள ஜனங்கள் மரித்துப்போவார்கள். ஆனால், எனது இரட்சிப்பு தொடர்ந்து என்றென்றும் இருக்கும். எனது நன்மைக்கு முடிவு இராது.
ஏசாயா 51:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போகும்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.