ஏசாயா 42:3-4 - Compare All Versions
ஏசாயா 42:3-4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்; அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார். பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார். தீவுகள் அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.”
ஏசாயா 42:3-4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்தும்வரை தடுமாறுவதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்திற்குத் தீவுகள் காத்திருக்கும்.
ஏசாயா 42:3-4 TAERV (பரிசுத்த பைபிள்)
அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்.”
ஏசாயா 42:3-4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.