ஏசாயா 4:1-2
ஏசாயா 4:1-2 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அந்த நாளிலே ஏழு பெண்கள் ஒரே புருஷனைப் பிடித்து இப்படிச் சொல்வார்கள்: “நாங்கள் எங்கள் சொந்த உணவைச் சாப்பிட்டு, எங்கள் சொந்த உடைகளையும் உடுத்திக்கொள்வோம்; உமது பெயரை மாத்திரம் எங்களுக்கு வழங்கி, எங்கள் அவமானத்தை நீக்கிவிடும்!” அந்த நாளிலே யெகோவாவின் கிளை, அழகுடனும் மகிமையுடனும் விளங்கும்; இஸ்ரயேல் நாட்டில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அந்த நாட்டின் கனி பெருமையும், மகிமையுமாகும்.
ஏசாயா 4:1-2 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்நாளில் ஏழு பெண்கள் ஒரு ஆணைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை சாப்பிட்டு, எங்கள் சொந்த உடையை அணிவோம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பெயர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே யெகோவாவின் கிளையானது அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.
ஏசாயா 4:1-2 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது, ஏழு பெண்கள் ஒருவனை பற்றிக்கொள்வார்கள். அவர்கள், “நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த ஆடைகளை அணிந்துகொள்கிறோம். இவை அனைத்தையும் நாங்களே எங்களுக்குச் செய்துகொள்கிறோம். எங்களை நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை மட்டுமே உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நாங்கள் உன் பெயரை மட்டும் வைத்துக்கொள்வோம். எங்கள் அவமானத்தை நீக்கு” என்று சொல்வார்கள். அப்போது, கர்த்தருடைய செடியானது (யூதா) அழகாகவும் உயர்வாகவும் இருக்கும். இஸ்ரவேலில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்கள் தம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைவார்கள்.
ஏசாயா 4:1-2 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.