ஏசாயா 18:1-7
ஏசாயா 18:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால், இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு! இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல் கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது. விரைந்து செல்லும் தூதுவர்களே, உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள். இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் வாழ்பவர்களும், பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும் மலைமேல் கொடியேற்றப்படும்போது, அதைக் காண்பீர்கள். எக்காளம் முழங்கும்போது அதைக் கேட்பீர்கள். யெகோவா என்னிடம் கூறுவது இதுவே: “சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும், அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும் நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.” ஏனெனில் அறுவடைக்குமுன், திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது, யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும், படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார். அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்; பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும், காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும். உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும். இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும்.
ஏசாயா 18:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் இறக்கைகளுடையதும், கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ, வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள். பூமியில் குடியிருக்கிறவர்களும், தேசத்து மக்களுமாகிய நீங்களெல்லோரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார். திராட்சைச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றி காய்க்கிற காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே காய்ப்புக்களை அறுத்துக் கொடிகளை வெட்டி அகற்றிப்போடுவார். அவைகள் ஏகமாக மலைகளின் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பறவைகள் அதின்மேல் கோடைக்காலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மழைக்காலத்திலும் தங்கும். அக்காலத்திலே அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான தேசமானது, சேனைகளின் யெகோவாவின் நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில் சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
ஏசாயா 18:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
எத்தியோப்பியாவை அதன் ஆறுகளோடு பார். அந்த நாடு பூச்சிகளால் நிறைந்திருக்கிறது. அவற்றின் சிறகுகளின் இரைச்சலை உங்களால் கேட்க முடியும். அந்த நாடு ஜனங்களை நாணல் படகுகளில் கடலைக் கடந்து செல்லுமாறு அனுப்பியது. விரைவாகச் செல்லும் தூதர்களே! வளர்ச்சியும் பலமும் கொண்ட ஜனங்களிடம் போங்கள். (எல்லா இடங்களிலும் உயரமும் பலமும் கொண்ட ஜனங்களிடம் மற்ற ஜனங்கள் பயப்படுவார்கள். அவர்கள் வல்லமைமிக்க தேசத்தை உடையவர்கள். அவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கிறது. ஆறுகளால் பிரிக்கப்படுகிற நாட்டில் அவர்கள் இருக்கிறார்கள்). அவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று அந்த ஜனங்களை எச்சரிக்கை செய்யுங்கள். இந்த உலகிலுள்ள அனைத்து ஜனங்களும் இவர்களுக்கு ஏற்படப்போவதைக் காண்பார்கள். மலையில் ஏற்றப்பட்டக் கொடியைப்போன்று, ஜனங்கள் இவற்றைத் தெளிவாகப் பார்ப்பார்கள். இந்த உலகிலுள்ள அனைத்து ஜனங்களும் இந்த உயர்ந்து வளர்ந்த ஜனங்களுக்கு நிகழப்போவதைப்பற்றிக் கேள்விப்படுவார்கள். போருக்கு முன் கேட்கும் எக்காளத்தைப்போன்று தெளிவாக அவர்கள் கேட்பார்கள். கர்த்தர் என்னிடம், “நான் எனக்காகத் தயார் செய்யப்பட்ட இடத்தில் இருப்பேன். நான் நிகழ்பவற்றை அமைதியாகக் கவனிப்பேன். அழகான ஒரு கோடை நாளில் நடுப்பகலில் ஜனங்கள் ஓய்வாக இருப்பார்கள். (இது வெப்பமுள்ள அறுவடைக்காலமாக இருக்கும். மழை இல்லாதபோது, காலைப்பனிமட்டும் இருக்கும்.) பிறகு ஏதோ பயங்கரமான ஒன்று நிகழும். பூக்கள் மலர்ச்சியடைந்த பிறகுள்ள காலமாக இருக்கும். புதிய திராட்சைகள் மொட்டு விட்டு வளர்ந்துகொண்டிருக்கும். ஆனால் அறுவடைக்கு முன்பு, பகைவர்கள் வந்து செடிகளை வெட்டிப்போடுவார்கள். பகைவர்கள் கொடிகளை வெட்டித் தூர எறிவார்கள். திராட்சைக் கொடிகள் மலைப் பறவைகளுக்கும், காட்டுமிருகங்களுக்கும் உணவாகக் கிடைக்கும். அக்கொடிகளில் பறவைகள் கோடை காலத்தில் தங்கும். மழைக் காலத்தில் காட்டு மிருகங்கள் அக்கொடிகளை உண்ணும்” என்றார். அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு ஒரு விசேஷ காணிக்கை கொண்டுவரப்படும். இக்காணிக்கை உயரமும், பலமும் கொண்ட ஜனங்களிடமிருந்து வரும். (எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் இந்த உயரமும் பலமும் கொண்ட ஜனங்களுக்கு அஞ்சுவார்கள். அந்த வல்லமை மிக்க தேசத்தைக் கொண்டவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கும். ஆறுகளால் பிரிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் இருப்பார்கள்). இந்தக் காணிக்கை சீயோன் மலையான, கர்த்தருடைய இடத்திற்குக் கொண்டுவரப்படும்.
ஏசாயா 18:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும், கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள். பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார். திராட்சச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிற காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளையரிந்து அகற்றிப்போடுவார். அவைகள் ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பட்சிகள் அதின்மேல் கோடைகாலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மாரிகாலத்திலும் தங்கும். அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது, சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.