ஓசியா 6:4-6
ஓசியா 6:4-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது. அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்; என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும். நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன்.
ஓசியா 6:4-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தைகளைக்கொண்டு அவர்களைக் கொன்றேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன்.
ஓசியா 6:4-6 பரிசுத்த பைபிள் (TAERV)
“எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது? யூதா, நான் உன்னை என்ன செய்வது? உனது விசுவாசம் காலை மூடுபனியைப் போன்று உள்ளது. உனது விசுவாசத் தன்மை காலையில் மறையும் பனித்துளியைப் போன்று உள்ளது. நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி ஜனங்களுக்காக சட்டங்களைச் செய்தேன். எனது கட்டளைகளால் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அந்த முடிவுகளிலிருந்து நன்மைகள் வரும். ஏனென்றால் நான் பலிகளை அல்ல. விசுவாசமுள்ள அன்பையே விரும்புகிறேன். நான் ஜனங்கள் தகன பலிகளை கொண்டு வருவதையல்ல ஜனங்கள் தேவனை அறிந்துகொள்வதையே விரும்புகிறேன்.
ஓசியா 6:4-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.